நாடும் நாமும்

யான் காணும் இன்பெமெல்லாம்
பிறர் தனழில் எரிந்தாற்போல்
அரைமனதோடு ஆற்றாமையாய் இருக்கிறேன்
ஊனை ஊணையாய் நிதம்தின்று
வெந்திடுதே என் மனம்
மறைதலில் கூட நான் வேண்டுவெதெல்லாம்
நளியோர் என் பிணம் தூக்க வேண்டும்
கரைமுகில் போல் காலம் முழுதும் காலாடை அணிந்தாலும்
சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன் அன்பிற்காய் அலையும் அச்சிறுவர்களின் மனதில்
பிரித்தாளும் கொள்கை உள்ள நாட்டில் பசித்தாளும் கொள்கை பரந்து
விரிந்துகொண்டே வருகிறது நிதம் நிதம்
பெண்மை உடைந்து நளினம் கெட்டு வீதியில் திரியும் ஏழை
மங்கை இந்நாட்டின் சாபத்தின் அடையாளம்
காலகாலமாய் கண்ட வாழ்வெல்லாம் கரையிழந்து
கல்லாகி போனதோ ஏளனமாய்
நாடும் நலம் பெற வேண்டும் நாமும் நலம் பெற வேண்டும்
என்ற எண்ணமெல்லாம் மாறி
இந்நாடு நாசமாய் போகட்டும்
நான் மட்டும் ஆடலுடனும் அரைகுறையாய் உடுத்தும்
நங்கையின் நடுவில் கரைபடியாத கையுடன் அதில் கோப்பை கொண்டு வாழ்வேன்
என்ற உயரிய எண்ணம் வாழ்ந்திருக்கிறது
தனி மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவேன் வரி ஏட்டுடனே முடிந்ததென ஏமாற்றம் கொள்கிறேன்

நீங்கள் தெருவில் காணும் யாரும்
ஆசையுடன் அலைவதில்லை
ஒரு வேளை சோற்றுக்காய் திரிகின்றனர்
கண்டும் காணாமல் இருக்க அவர்கள் யாரோ ஒருவரில்லை
நம்மில் ஒருவரே.....

என்னை விட மேலோர் எத்தனையோ
இது பற்றி கவியுடன் கூறியிருந்தாலும் நானும் கூறிகிறேன் வார்த்தைகளாய்
மாற்றம் நம்மில் இருந்து நிகழட்டும்
உங்கள் அன்பிற்கினியவன். ப்ரஹன்

எழுதியவர் : ப்ரஹன் (23-Sep-18, 4:35 pm)
சேர்த்தது : ப்ரஹன்
Tanglish : naadum naamum
பார்வை : 109

மேலே