காவியா

ஏன்டா கண்ணையா...

என்னம்மா?

மொதல் கொழந்தை பொண்ணு. அதுக்கு 'காவியா'-ன்னு பேரு வச்சிட்டே. இப்ப ரண்டு வருசம் கழிச்சு அழகான பையன் பொறந்திருக்கறான். அவுனுக்கு என்ன பேரு வைக்கறதுன்னு நீயும் பூவழகியும் முடிவு பண்ணீட்டீங்களா?

இல்லம்மா. என்ன பேரு வைக்கிறதுன்னு தெரியாம ரண்டு பேரும் தடுமாறிட்டு இருக்கிறோம். பையனுக்கு நீங்களே உங்களுக்குப் பிடிச்ச பேர வச்சிடுங்க.

கண்ணையா, எனக்கு ஒரு யோசனை தோணுது. பொண்ணுப் பேரு காவியா. பையனுக்கு 'காவியன்' னு பேரு வச்சா என்னா?

ரொம்ப அருமையான பேரும்மா. ஒரு சின்ன ஊர்லகூட பத்துப் பெண் கொழந்தைங்க பேரு காவியாவா இருக்கும். ஆனா உலகத் தமிழர்களில் யாரோட பையம் பேரும் 'காவியன்'னா இருக்காது. ரொம்ப நன்றிங்க அம்மா.

எழுதியவர் : மலர் (23-Sep-18, 11:56 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 248

மேலே