ரகசியம் 8

அன்பு இரவு முழுவதும் தூங்க வில்லை.... எப்பொழுது விடியும் எப்போது வெளியே செல்வோம்...என காத்து கிடந்தான்.. கண்கள் சிவக்க குழப்பங்கள் தலையை உடைக்க மிகவும் பதற்றத்துடன் அக்குரலை பற்றிய யோசனையுடன் காத்திருந்தான்...

விடியற்காலை
சூரிய உதயத்திற்கு முன்பே பெரியம்மா
எழுந்து, வாசல் பெருக்கி கோலம் இடுவார்... ஆனால் அன்றோ அவர் எழுந்து வெளியே வரவே இல்லை..
விடிந்து சூரியன் வந்து வெகு நேரம் ஆனது... ஆனாலும் அவர் வரவில்லை... அன்பு அவருக்கு உடல் நிலை சரியில்லையோ என்னவோ ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார் போல, என்று நினைக்கும் போதே பெரியப்பா வெளியே வந்து, என்ன அன்பு சீக்கிரம் எழுந்துட என கேட்க, பின்னே பெரியம்மாவும் வந்து நின்றார் ...கதவின் தாழை திறந்து சாவியை கொண்டு பூண்டையும் திறந்தார் பெரியப்பா...
பின் பெரியம்மா வாசல் பெருக்கி கோலம் இட்டார்.. அனைத்தையும் கவனித்து கொண்டே வெளியே நின்று எதாவது தெரிகிறதா?என கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கண்ணாலே பதற்றத்துடன்
சுற்றிலும் பார்த்தான்.

அன்பின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டே இருந்த பெரியப்பா .. ... ஒன்றும் தெரியவில்லை தெருவில் இரண்டு மூன்று பேர் வழக்கம் போல பதற்றம் இல்லாமல் நடந்து போய் கொண்டிருந்தனர்... அப்படி என்றால் ஊரில் எந்த வித விஷயமும் நடக்க வில்லை...அக்குரலுக்கும் ஆபத்து எதுவும் நடக்கவில்லை என்று உணர்ந்து தன் மனதில் பேசி கொண்டே வீட்டின்உள்ளே வந்தான்.

..அன்பு உள்ளே வந்ததும் பெரியப்பாவிடம் அக்குரலை பற்றி ஏதாவது கேட்டு இருப்பானா? இல்லை பெரியப்பா அன்பின் நடவடிக்கை பார்த்து அவர் அன்பிடம் ஏதாவது சொல்லி இருப்பாரா??அக்குரல் யாருடையது? என்ன நடந்தது அக்குரலுக்கு?????

எழுதியவர் : உமா மணி படைப்பு (24-Sep-18, 9:51 am)
சேர்த்தது : உமா
பார்வை : 159

மேலே