தமிழ் -ஆங்கிலம்
தமிழ் -ஆங்கிலம்
ஊனோடு ஒட்டிய தோல் -தமிழ்
உடல் ஓட்டும் சட்டை -ஆங்கிலம்
தோல் உரித்தால் ஆயுள் மிஞ்சுமோ
சட்டை இல்லையேல் சங்கடம் தான் வருமோ
கழுத்தோடு ஒட்டிய சிரம் -தமிழ்
சிரத்திற்கிடும் தொப்பி - ஆங்கிலம்
சிரம் வெட்ட உயிர் மிஞ்சுமா
தொப்பி இல்லைஎனிலும் தப்பில்லையே
அண்டம் காணும் கண் -தமிழ்
அது மேல் அணியும் கண்ணாடி -ஆங்கிலம்
அண்டம் காணும் கண்போனால் பிண்டம்தானே
கண்ணாடி இல்லையென்றாலும் கைத்தடி உண்டல்லவோ