மீண்டும் பிறப்பாயாக

அணுக்களும் ஆற்றலும்
அண்டமாய் அமையுற,
இங்கிருப்பிடம் அமைந்தே
இருப்பவர் தோன்ற,
உயிரணு கூர்ப்புற்ற
மாந்தனோ இதைமறந்து
தமக்கெனயெண்ணா
தனக்கென தான்ஆள
பிறஅடிமையுற இன்புற்றஇவன் போதுமெனபலர் வீருண்டெழ எதிர்வினைதாக்குதலை உணர்ந்து அகிம்சைஒளிவீச சுதந்திரநிழல் படர்ந்தெனினும்,
சாதிமத இனகாமவெறியுற்று தன்னை தந்தவளை தானேஅடிமையென
அவளோ இவன்வகுத்த கடவுளேகதியென
ஆடிக்குள் அகப்பட்டிருப்பதறியா நிழலுருபோலிங்கிருக்கும்
இம்மக்கட்ள் அறியாமைநீங்க ஒவ்வொர் மனதிலும்
மீண்டும் பிறப்பாயாக...

எழுதியவர் : உமாமகேஸ்வரன் (23-Sep-18, 11:16 pm)
பார்வை : 132

மேலே