பிள்ளையார் சதுர்த்தி
பிள்ளையார்
ஒரு தந்தம் கொண்டு பாரதக் காதைதனை எழுதி
இரு தந்த யானையாக வந்து வள்ளி திருமணம் முடித்து
முக்கண்ணன் மகனாய் முதற் கடவுளாகி முன்வினை களைந்து
நான்கு வேதமும் அறியும் ஞானிகளால் போற்றி பாடப் பெற்று
ஐம்புலன் அடக்கும் வழி அவனியுள்ளோருக்கு காட்டி
ஆறுதல் வேண்டிடும் மனதிற்கு அபயம் அளித்து
ஏழுயேழு பிறவிக்கும் உயர்வளித்து உய்வித்து
எண்திசைவரும் துயர் துடைத்து எனைக் காத்து
ஒன்பது வித பக்தி கொண்டு புகழ் பாடி உணர்ந்து
பத்து நாட்கள் கொண்டாடும் பிள்ளையார் உற்சவம் இதுவே!!