விரும்பாத ஒன்றே

விரும்பாத ஒன்றே!
உன் மடியில் நான் துயிலவே
உன் கருவறையின் சுமையல்ல நான்.

என்னை பார்த்தே நீ உன்னை அழகுபடுத்திக்கொள்ளவே
உனது குளியலறையின் கண்ணாடி அல்ல நான்.

என் மீது சாய்ந்தே நீ உறங்கிடவே உனது படுக்கையறையின் தலையணை அல்ல நான்.

உனது விருப்பப்படி நீ என்னை வருத்தெடுக்கவே உனது
சமையலறையின் வடைச்சட்டி அல்ல நான்.

உனக்கு வேண்டாததையெல்லாம் வேண்டிய நேரத்தில்
என் மீது நீ வெளியேற்றிடவே உனது கழிவறை கோப்பையல்ல நான்.

யாருக்கு வந்த விதியே என்று நீ வந்து அமர்ந்திட உனது வரவேற்பறை இருக்கையல்ல நான்.

வாழ்ந்தது போதும் வந்துவிடு என்னோடு என்றே நீ கூப்பிட உனது கல்லறையின் சவப்பெட்டியல்ல நான்.

சுட்டித்தோழி சுபகலா.

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (24-Sep-18, 7:22 pm)
Tanglish : virumbaatha ondrey
பார்வை : 1317

மேலே