சகோதரி அனிதா

ஏழையின்வாழ்வின்
ஏற்றத்தின் ஏணி கல்வி-அதை
மூலதனமாக்கப்பட்ட முயற்சி!!
முறைப்படுத்தப்பட்ட பயற்சி!!!
கல்வியெனும் காகிதப்பட்டம்
காரிருளென சூழ்ந்த
வறுமை வானத்தில்
அநீதியால் அறுக்கப்பட்டக்கொடுமை!
மருத்துவம் சேர
மதிப்பெண் சேர்த்தாய்...அநீதியால்
மதிப்பற்ற பெண்ணென எண்ணி
வழக்கில் உச்சம் கண்ட
வாழ்க்கைப்போராளி!
சாதி,மதம் கடந்த
சகோதரியாய் சரித்திரம் படைத்தாய்!
மரணம் கண்ட உமக்கு
மக்கள் கொடுத்த மருத்துவர் பட்டம்!!
மனத்திடம் உடைத்த
மறுக்கப்பட்ட நீதி!
போர்க்குணம் கொண்ட நீதிக்குரல்!
அர்பணமே அநீதிக்கு எதிர்!!

எழுதியவர் : நடராஜன் அச்சுமல்லையன் (25-Sep-18, 11:28 pm)
பார்வை : 51

மேலே