தமிழின் காதலன்

தமிழின் காதலனே
தமிழின காவலனே
தரணி போற்றும்
தங்கச் சிலையோனே

தமிழுக்கு சிறப்பு
செய்தாய் செம்மொழியாக்கி
தமிழருக்கு பெருமை
சேர்த்தாய் தலைவனுமாகி

விதவைக்கும் பொட்டு
வைத்தாய் கைம்பெண் ஆக
ஒதுக்கப்பட்ட உள்ளத்திற்கும்
மதிப்புதந்தாய் திருநங்கை ஆக

வசனத்திலே வாள்
வீசும் பராசக்தி
பேச்சினிலே போர்
தொடுக்கும் யுக்தி

காற்றினிலே கலந்துவிட்டாய்
காவியமாக உந்தன்
கால்தடம் பற்றி
வந்திடுவோம் கண்ணியமாக...

எழுதியவர் : ராமச்சந்திரன் (26-Sep-18, 12:33 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : thamizhin kaadhalan
பார்வை : 71

மேலே