திராவிடமும் செந்தமிழும்
ஆளுமையின் ஆணிவேராய்
எங்களை வியப்பில் ஆழ்த்திய
மாமேதையின் மருஉருவம் ஐயா நீர்!
அண்ணாவையும்,ஈ.வெ.ரா வையும்
ஒன்றினைந்து வாழ்ந்ததை
உங்களின் வழித்தடங்களில் கண்டோம் ஐயா!
தமிழ் மொழியை எங்களின்
வெறும் பேச்சு என்று கருதினோம்!
செம்மொழி வாயிலாக தமிழர்களின்
மூச்சு என்று என்று உணரச் செய்தீர்!
உங்களுக்கு பல முகங்கள் உண்டு!
ஆனால்!
பூமித்தாயின் மடியில் சுமந்து
கண்மூடிக் கொண்டே போராடும்
ஒரு போராளியாய் மட்டுமே கண்டோம்!
விமர்சனங்களை மாலையாய் கோர்த்து செங்கோல் ஆட்சியின்
முடிசூடா மன்னனாய் ஆட்சி செய்ததை கண் கோடிக் காணக் கண்டோம்!
விண்ணை தொடும் அளவு
உங்கள் பணி தொன்று தொட்டு
தொடர்ந்தாலும்!
எங்கள் இதயத்தில் என்றும்
நீங்கா நினைவுகளுடன்
வாழ வழி செய்துள்ளீர் ஐயா!
இருவிரல் இடையில் இருக்கும்
உங்கள் பேனாவின் முனைக்கே
வலித்திருக்கும்!
இனி உறங்கப் போவது நீர் மட்டுமல்ல நானும்தான் என்று!
உங்கள் வயதுக்குத்தான் முதுமை உண்டு ஆனால்!
உங்களின் கவிபாடும்
வசன ஜாலங்களுக்கு என்றும்
முதுமை காண இயலாது!
தமிழர்களின் ராஜதந்திரியாய்
வாழ்ந்துள்ளீர் என்றாலும்
உங்களுக்கு நிகர் நீங்களே ஐயா!
புகழ் ஒன்றும் புதிதல்ல!
அறியனை ஒன்றும் அரிதல்ல!
உங்களை இதயத்திலே சுமந்து
ஊர்வலமாய் வீரநடை கொண்டு
நாங்கள் வந்தோம் ஐயா!
விவசாயின் புதிய விடியலாய் !
ஏழையின் சிரிப்பில் புது விடி வெள்ளியாய்!
என்றும் சூரியனாய்
ஒளிரச் செய்தீர்
ஐயா நீர்!
தானே எழுத்தாகி !
தமிழுக்கே மொழி பெயர்த்து !
சாதி, மதம் தாண்டி "தமிழர்" என்று
உணர வைத்த மண்ணின் மைந்தர்
ஐயா நீர்!
உங்கள் சரித்தித்தையே தமிழர்களின் சுயசரிதையாய் முழங்கச் செய்த மாமன்னர் ஐயா நீர்!
அச்சமும், நாணமும் ஒரு பெண்ணின் பெருமையை திரையில்
மூடிவிடக்கூடாது!
எனும் உங்களின் வரிக்கு இனங்க
நானும் ஒரு பெண்மையின்
பெருமிதமாய் கருதுகிறேன்!