நிம்மதி

நிம்மதியை
கொடுத்தவர்களே
எடுத்துக்கொண்டார்கள்
அதனால்தான்
என்னாவோ
ஆண்கள்
அதிகவீழுக்காடு
ஊமைகளாய்
கண்ணிருந்தும்
குருடனாய்
முடவனாய் …………..
ஏன் ?
நடைப்பிணமாய்
காலத்தை
நகர்துகிறார்கள்
அவர்களுக்கோ
இறுமாப்பு
தாம்
ஆள்கிறாம் என்று
பொய்மைதோற்றம்
மௌனமல்ல
அது எரிமலையின்
பொறுமை
அதிகம்
சீண்டாதீர்……….
அது
அக்கினியை
உமிழும்
அன்பிற்காக
தன்னையே
தண்டித்துக்கொண்டார்
கடமைக்காக
தன்னையே
தாரைவார்த்துக்கொண்டார்
ஏன் ?
மரணம் கூட
அவனிடம்
மண்டியிட்டு
வேண்டும் ………….
ஏன்?
கல்லாய் நின்று
காவல் காக்கிறாய்
என்று ………………….
ஆம், நானும்
கடவுள்தான்
அவன்போல
கல்லாய்,
ஊமையாய்,
செவிடாய்,
ஆனால்
உன்னையும்
வணங்கவைத்தவன்
மறுப்பாயோ !
மறந்தாயோ !

எழுதியவர் : அன்பரசு (26-Sep-18, 5:34 pm)
சேர்த்தது : அன்பரசு
பார்வை : 392

மேலே