ரகசியம் 9
அன்பு வீட்டிற்குள் வந்தான்.. அன்றைய பொழுது யாரிடமும் எதுவும் பேசவில்லை குழப்பங்களுடன் வேகவேகமாக குளித்துவிட்டு காலை உணவை உண்ணு முடித்து வெளியே சென்றான். பெரியம்மா வெளியே போயிட்டு வரேன். எங்க போற என்று பெரியம்மா கேட்டார்.. கோவிலுக்கு போயிட்டு வரேன் பெரிமா அதுமட்டுமில்லாது எனது நண்பர்கள் சிலர் இருக்கின்றனர் அவர்களையும் பார்த்துவிட்டு வருகிறேன் என்றான் அன்பு...
சரி என்று எங்க போனாலும் மதியம் சாப்பாட்டுக்கு வந்திடு அதற்கு மேலே வெளியே இருக்க கூடாது சரியா என்றார் பெரியம்மா..,. உடனே நித்யா நானும் வரேன் நானும் வரேன் என்று அவளும் கிளம்பினாள்... வேண்டாம் நான் போயிட்டு வந்திடறேன் .சீக்கிரமா வந்து விடறேன் சரியா என்று சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டான் அன்பு.....
முதலில் கோவிலுக்குச் சென்றான். அது அம்மன் கோவில் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது... கோவிலுக்கு வெளியே பூ விற்பவரிடம் பூவை வாங்கி கொண்டு கோவிலுக்குள் சென்றான்.....
கோவிலை பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை சுற்றி வந்தான்... அங்கு ஒரு பெரியவர் அமர்ந்து கொண்டிருந்தார் அவர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான்.. அக்குரலை பற்றி விசாரிக்கலாமா என்று மனசுக்குள் முனகிக் கொண்டிருந்தான்.... வேண்டாம் பெரியப்பாவிற்கு தெரிந்தால் அவர் திட்டுவார் அதுமட்டுமில்லாமல் நான் விசாரிப்பது தெரிந்தால் என்னை ஊரை விட்டு வீட்டிற்கு அனுப்பி விடுவார்...,.
ஊராரிடம் விசாரிக்காமல் குரலை பற்றி எப்படி அறிவான்? பெரியப்பாவிடமும் கேட்கவில்லை...,. எப்படி கண்டறிவான் அக்குரல் யாருடையதாக இருக்கும்????