சுந்தரியும் சந்ததியும்

சுந்தரியும் சந்ததியும்
***************************************
சந்திரனும் வீண் ஏற கலவியதும் மனமேற
இந்திரனாய் தனையொத்து காந்தர்வம் புரிந்திடுவார்
விந்திறங்கி வழிந்துவிட தானவீழ்ந்து மறைந்திடவும்
சுந்தரியும் சந்ததியும் நடைமேடை ஓரத்தில்
அந்தரத்து இவர்நிலையோ அத்திரமாம் விதியுள்ளே
கேந்திரங்கள் எங்கெங்கும் இந்நிலையே இன்றுவரை
மந்திரத்தின் நாயகனே இக்கயமை கண்டிப்பாய்

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Sep-18, 7:35 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே