புரிந்து கொண்டால்

கவிதை

புரிந்துகொண்டால் ....
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

வாழ்வில்
புரிந்து கொண்டால்
வன்மை கூட
மென்மையாகத் தெரியும் !
புரியவில்லையானால்
மென்மை கூட
வன்மையாகத் தெரியும்!

வாழ்வில்
புரிந்து கொண்டால்
கல் எறிந்தால் கூட
மலராகத் தோன்றும் !
புரியவில்லையானால்
மலர் விழுந்தால்கூட
கல்லாகத் தோன்றும் !

வாழ்வில்
புரிந்து கொண்டால்
ஆயுதம் கூட
காகிதமாகத் தோன்றும் !
புரியவில்லையானால்
காகிதம் கூட
ஆயுதமாகத் தெரியும் !

வாழ்வில்
புரிந்து கொண்டால்
கோபம் கூட
குணமாகத் தோன்றும் !
புரியவில்லையானால்
பேசுவது கூட
கோபமாகத் தோன்றும்!

வாழ்வை
புரிந்துகொண்டால்
ஏற்றம் மாற்றம் உண்டு
இறக்கம் என்பதே
இருக்காது
புரிந்து வாழுங்கள்!

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (27-Sep-18, 9:49 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : purindhu kondaal
பார்வை : 389

மேலே