தொலைத்த உறவு
துளித்துளியாய் மண்ணில்
விழுந்த மணித்துளியாய்
சேர்த்துவைத்த மழை மேகம்
தொலைத்து விட பொழிந்ததே
காதல் எனும் வயல்காட்டில்
காணவில்லை எனத்தேடும்
உன் கண்கள் என்னைக் காணலையோ
பூத்த கண்கள் பாக்கலையோ என்
பூத்தகண்கள் பாக்கலையோ....
காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே
பூவிற்குள் தேன் பிறக்கும்
வண்டிற்கு அது பிடிக்கும்
காற்றுக்குள் தென்றல் உண்டு
காதலுக்கு அது பிடிக்கும்
காயங்கள் பல உண்டு
மறவனுக்கு அது பிடிக்கும்
சூரியனை வெறுத்தாலும்
இளங்காலை வந்தே உதிக்கும்
காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே
என்ன இல்லை என்றாலும்
வெறுமையாகிப் போவதில்லை
மேலே வானம் கீழே பூமி
காற்றுடனே உறவாடி
வெயிலோ மழையோ
தொட்டு தொட்டு விளையாடி
முகிலுடனே கவிபாடி
வாழ்க்கை என்றும் தொடருமே
காதலே காதலே எனைத்தொலைத்து பாடும் காதலே