ஷீலாவின் காதல்

மயிலாப்பூர் ரயில் நிலையம், காலை மணி ஒன்பது கையில் handbag உடன் ஷீலா அவசரமாக ரயில் நிலயப் படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தாள், வேளச்சேரி செல்லும் ரயிலை பிடிப்பதற்காக . ஷீலா வருவதற்குள் ரயில் சென்று விட்டது. அடுத்த ரயில் பத்து நிமிடத்திற்குப் பிறகு வரும். கடிகாரத்தைப் பார்த்தால் அலுவலகம் செல்வதற்கு நேரம் ஆகிக்கொண்டு இருந்ததது. ஷீலா வேளச்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள்.

அவளுடைய சொந்த ஊர் ஊட்டி.குடும்பத்துடன் சென்னை வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. ஷீலாவின் ஒரே அண்ணன் ராஜா துபாய்யில் வேலை செய்து வருவதால் அவளுடைய பெற்றோர்கள் ஷீலாவுடன் சென்னைக்கு வந்து விட்டனர். ஆரம்பத்தில் சென்னையின் கூட நெரிசல், மாறுபட்ட வானிலை என்று எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பின்னர் அதுவே பழகிவிட்டது. அவளது அப்பா ராமகிருஷ்ணன் பொழுபோக்கிற்காக ஒரு சிறிய நிறுவனத்தில் எழுத்தாளர் ஆக பணிபுரிந்து வந்தார். ஷீலாவும் அவளது அண்ணனும் எவ்ளோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரி அவரது இஷ்டம் என்று விட்டுவிட்டனர். அம்மா லட்சுமிக்குத்தான் பகல் நேரத்தில் பொழுது போக்குவது கடினமாக இருந்தது . அதனால் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று வந்தார். பின்னாளில் அதுவே லட்சுமி அம்மாவின் மனத்திற்குப் பிடித்த இடம் ஆகிவிட்டது.

ஷீலா தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து கொண்டே நிமிரும் போது சட்டென்று அதிர்ந்து போனாள். ஏனென்றால் அவளுக்கு மிக அருகில் மாறன் நின்று கொண்டிருந்தான். அவள் விலகிச் செல்ல எத்தனிக்கையில் அவன் வழி மறித்தான். ஷீலா நில், இன்னும் எத்தனை நாள் உன் பின்னால் அலைந்தாள் எனக்கு சம்மதம் சொல்வாய். அவள் பதில் ஏதும் கூறவில்லை. மீண்டும் விலகிச் செல்ல
முயன்றால். ஆனால் இன்று மாறன் விடுவதாய் இல்லை ஒரு முடிவோடுதான் இருந்தான். அவளது கரம் பிடித்து நான் உன்னிடம் தான் கேட்டேன் என்றான். அவளுக்கும் புரிந்து விட்டது. இவனிடம் இருந்து இன்னும் தப்பிக்க முடியாதென்று. மாறன் ஷீலாவின் தூரத்து சொந்தம் தான். இவளுக்கும் அவனை மிகவும் பிடிக்கும் அது அவனுக்கும் தெரியும். ஆனால் அவளது வீட்டில் என்ன சொல்வார்களோ என்று நினைத்தே அவனை தவிர்த்து வந்தாள். ஷீலாவின் குடும்பம் சென்னை வந்தபிறகு இவளுக்காகவே பெங்களூரில் இருந்து சென்னைக்கு பணி மாறுதல் வாங்கி வந்திருந்தான். ஷீலா ஊரில் இருக்கும் போது இவளை பார்ப்பதற்காகவே அனைத்து விழாக்களுக்கும் தவறாமல் சென்று விடுவான். அவள் யாருக்கும் தெரியாமல் இவனைப் பார்ப்பதை இவன் கவனித்து விடுவான். சிறு வயதில் ஒன்றாக சேர்ந்து விழையாடி இருக்கிறார்கள். பெரியவர்கள் ஆனதும் பேசுவதையே நிறுத்துக் கொண்டனர். அதுவே இருவரின் மனதில் காதல் துளிர காரணம் ஆகிவிட்டது.

ஷீலா அவளது கரத்தை அவனின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்தாள். நீங்கள் எது பேசுவதாக இருந்தாலும் என் வீட்டில் பேசிக் கொள்ளுங்கள் என்னை விட்டுவிடுங்கள் இங்கு அனைவரும் நம் இருவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால். உன் வீட்டில் பேசுவதற்க்கத்தான் அழைக்கிறேன் வா என்னோடு என்றான். சற்றே திகைத்து விட்டாள் இவன் என்ன கூறுகிறான் திடீரென்று இப்படிச் சொல்கிறான் என்று. அவளது அலைபேசி மணி அடித்தது அழைப்பை எடு உன் அம்மாவாகத்தான் இருக்கும் என்றான். ஆம் அவளுடைய அம்மாதான். என்ன அம்மா சொல்லு, மறுமுனையில் அவள் அம்மா ரயில் ஏறிவிட்டாயா? இல்லையென்றால் வீட்டிற்கு வா. மாறன் வீட்டில் இருந்து உன்னை பெண் பார்க்க வருகிறார்களாம். அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விடு என்று கூறி விட்டு பதிலிற்கு கூட காத்திராமல் அலைபேசியை வைத்து விட்டாள். இவளுக்கு ஒன்றும் புரிய வில்லை என்ன நடக்கிறது என்று மாறனை பார்த்தாள். நீயாக சம்மதம் சொல்வதாய் எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் என் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டேன் . அவரகள் உன் வீட்டிலும் பேசி விட்டார்கள் ஆனாலும் முறையாக பெண் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வா என்னுடன் உன் வீட்ற்குச் செல்லலாம் என்றான். ஒரு கணம் இந்த உலகத்திலேயே இல்லை சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே ஷீலாவிற்கு தெரியவில்லை. அவளது அழகிய முகம் மேலும் பிரகாசமானது மாறன் அவளையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான். சற்று சுதாரித்துக் கொண்டு இல்லை நான் வீட்டிற்கு வந்து விடுகிறேன் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்றால் . எனக்கு சிறுது வேலை இருக்கிறது அதை முடித்து விட்டு வருகிறேன் நீங்கள் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டுத்தான் நான் வந்தேன். எத்தனை வருடங்களாக காத்திருக்கிறேன் இந்த தருணத்திற்கு இப்போதாவது சொல் உனக்கும் என்னை பிடிக்கும் என்று, அதை உன் வாயால் கேட்பதற்குத்தான் நான் இங்கு வந்தேன் என்றான். ஷீலா அழுதே விட்டாள் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா இத்தனை நாளாய் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன் எப்படியாவது உங்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்று. இப்போதாவது ஒத்துக்கொண்டாயே வா என்னுடன் என்று அவளை இழுத்துச் சென்றான். எங்கே செல்கிறீர்கள் என்னை விடுங்கள் நான் வீட்டிற்கு வந்து விடுகிறேன் நீங்கள் செல்லுங்கள் என்றாள்.

ஷீலா.. ஷீலா.. என்னடி ஏதோ உளர எந்துருச்சு கிளம்புடி ஆபீஸ்க்கு லேட் ஆகுது என்றபடியே அவளது அம்மா ஷீலாவை எழுப்பினால். ஐயோ இன்றும் அதே கனவா என்றபடியே எழுந்து கிளம்பச் சென்றாள். அப்பா போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்து விட்டு வந்து அம்மாவை அழைத்தார், மாறன் வீட்டில் இருந்து ஷீலாவை பெண் கேட்டு வருவதாக சொன்னார்கள் நானும் வரசொல்லிட்டேன். ஷீலா நீ ஆபீஸ்க்கு லீவ் சொல்லி விடு என்றார். என்ன இது இதாவது கனவா இல்லை உண்மையா என்று குழம்பி நின்று கொண்டிருந்தாள் அவள்.

எழுதியவர் : Muthumari prakash (28-Sep-18, 12:03 pm)
சேர்த்தது : muthumari ad
பார்வை : 431

மேலே