என் விருப்பம்

சகி...சகி...
நெஞ்செல்லாம் வலிக்குது சகி.....
பேசவே முடியல.
பேசும் போது வலிக்குது...
அம்மா வலிக்குது...
என்ன தயவு செஞ்சு யாராவது கொன்னுடுங்களேன்
உங்களுக்கு புண்ணியமா போகும்.

பிரபா...பிரபா....
எழுந்திரு மா
சாப்பிடலாம்...
மாமா...மாமா....
எங்க போன மாமா
என்ன தனியா விட்டுட்டு..

என்னாச்சு மா.
மருந்து வாங்க போயிருந்தேன்டா.

ரொம்ப வலிக்குது மாமா...
நீ வர வரைக்கும்
உசுர கைல பிடிச்சிட்ருந்தேன் மாமா...
உன்ன பாக்கணும்னு.

அதான் நான் வந்துட்டேன்ல இனி வலிக்காதுடா.

சாப்பிடலாமா...
ம்...
ஆ காட்டு
...
போதும் மாமா...
நல்ல பிள்ளை இல்ல.
இன்னும் ஒரு வா...
ம்...


மாத்திரை வேணாம் மாமா...
ஒரே கசப்பு...
ரொம்ப பெருசு பெருசா இருக்கு முழுங்கவே முடியல.

ஊசி போட்டுக்கறீயா...
ம்...
சகி கண்ணுக்குள்ளயே இருக்கா. பாக்கணும்னு மனசு கிடந்து தவிக்குது .
சகிய வரச்சொல்றீங்களா.

சகி வந்துக்கிட்ருக்காடா.
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா..

சகி கிட்ட ஒன்னும் சொல்லலயே.
சகி பயந்துடுவா...

இல்ல மா.
நான் எதும் சொல்லல.

நீ வரச்சொன்னன்னு தான் சொல்லியிருக்கன்.

ம்...
மாமா...
விஷ ஊசி எதுனா இருந்தா தயவு செஞ்சு போட்டு விடு மாமா...
அவள் வாயை கை வைத்து பொத்தி
ஏன்டி இப்படிலாம் பேசற என்று விரைவாக அணைத்துக் கொண்டான்.

அம்மா.....
தமிழ்.....

தமிழை பார்த்ததும் எழுந்து அவள் அருகில் ஓட

இருவரும் ஓடி வந்து அணைத்துக் கொள்கிறார்கள்..
அவள் பிள்ளைக்கு முகம் முழுவதும் முத்தம் இடுகிறாள்.

தமிழ் எப்படி இருக்கடா...
நான் நல்லா இருக்கன் அம்மா.
நீங்க நலமா இருக்கீங்களா மா..
நான் நலமா இருக்கேன் மா...

பொய் சொல்லாத மா.
மருந்து வாசம் வீசுது.
ஊசி மாத்திரை மருந்து குவிஞ்சு கிடக்குது.
அது ஒன்னுமில்ல சகி.
லேசா நெஞ்சு வலி மா.
மூச்சு விட சிரமமா இருக்கு டா

எங்கிட்ட ஏன்மா
எதையும் சொல்லல.
என் மகள என்னால அழ வைக்க முடியாதுடா.

சகி....
அம்மா...என்னாகுது மா...
கீழே விழ பிடித்துக்கொண்டு .
பார்த்தபடி அம்மா...அம்மா...
உடல் தூக்கி வாரி போட்டு துடிக்க
விரலை பிடித்தபடி தமிழ் என்று அழைக்க
மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது...
அப்பா என்று கத்தி அழைக்கிறாள்.
விரைவாக அங்கே வருகிறார்.
பிரபா....எழுந்திரு பிரபா என்று கையை பிடிக்க
தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டு
பின் அவர் மார்பில் தலை புதைத்தாள்.
தான் நிறைந்திருக்கும் அம்மார்பில் முத்தமிட்ட பின்.
அப்படியே சரிந்தாள்.
அவன் மடியில் இறந்தாள்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Sep-18, 9:02 am)
Tanglish : en viruppam
பார்வை : 304

மேலே