மந்திர நேரங்கள்

விடை தந்த வினாவெனினும்
விரையாத நினைவுகள்.
தூரம் தந்த புரிதலெனினும்
துயிலாத் துயரங்கள்.
மதுவற்ற கோப்பைக்குள் என்
மயக்கம் நிறைந்த மணித்துளிகள்!

கவியற்றுக் கிறுக்கப்பட்ட என்
பனைஓலைகளின் பழைய
காலங்களுக்குள் சில நொடிப்
பயணங்களின் சாரமாய் இக்
கோப்பைக்குள் குடியிருக்கும்
பருக இயலா மதுவின் மயக்கங்கள்!

வில்லென வளைந்தெனினும்
வார்த்தைகளின் உக்கிரங்கள்.
தீர்ந்துவிட்ட திங்களெனினும்
திகட்டாத இரவுகள்.
மற்றுமொருமுறை மதுவற்ற இக்கோப்பைக்குள்ளான என் மயக்கம் நிறைந்த மந்திர நேரங்கள்!

எழுதியவர் : பபியோலா (1-Oct-18, 12:02 am)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
Tanglish : manthira nerangkal
பார்வை : 75

மேலே