உயர்ந்த உணர்வுகளே

நாம் இறைவனைத்
தொழும் போது;

சங்கீதம் கேட்கும் போதும்,
ரசிக்கும் போதும்;

எல்லையில்லா ஆனந்தம்
கொள்ளும் போது;

கனவுகள் காணும் போதும்,
காதலன் காதலியை
முத்தமிடும் போதும்;

கண்களை மெதுவாக
மூடிக் கொள்வது இயல்பே!
அது சுகமே!

வாழ்வின் உன்னதமான
செயல்களும், தருணங்களும்
கண்களில் தோன்றும்
காட்சிகள் மட்டுமல்ல!

உள்ளத்தால் உணரப்படும்
உயர்ந்த உணர்வுகளே!


உயர்ந்த உணர்வுகளே!

நாமிறைவ னைத்தொழும் போது,
சங்கீதம் கேட்கும் போது,
இங்கிதமாய் ரசிக்கும் போதும்;
எல்லையில்லா ஆனந்தம் கொள்வோம்! 1

கனவுகள் காண்கின்ற போதும்,
காதலன் முத்தமிடும் போதும்;
காதலி கண்களை மெதுவாக
மூடிக்கொள் வதியல்பும் சுகமுமே! 2

வாழ்வின் உன்னதச் செயல்கள்,
தருணங்கள் கண்களில் தோன்றும்
காட்சிகள் மட்டுமல்ல! உள்ளத்தால்
உணரப்படும் உயர்ந்த உணர்வுகளே! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-18, 11:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : uyarntha unarvukale
பார்வை : 64

மேலே