ஆசை
வசதிகள் வாழ்க்கையில் ஏற ஏற
திருப்தியின் இறங்குமுகம்
இது போதாது இது போதவே போதாது
இன்னும் வேண்டும் வேண்டும் என்று
அலையும் மனது அத்துடன் போனது
மனதின் அமைதி ........
எல்லாம் இருந்தும் அமைதி இல்லையே
நொந்துபோகிறான் , அமைதியைத்
தேடி அலைகிறான்.................
புத்தன் அறிவுரை:' ஆசையே துன்பத்திற்கு காரணம் ''
ஆசையை களைந்தெறிய முடியலையே
ஆடும் படகில் ஓடும் வெள்ளத்தில்
ஆசைத் தீண்ட தத்தளிக்கிறான் மனிதன்
மீள்வதெப்போது, கரை சேர்வதெப்போது ?
திருச்சி லோகநாதன் பாட்டு 'பழைய நினைவுகளில்..
எப்.எம் ஒளிபரப்பில், " ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே..........." அதன் பின்
தொடர்ந்து வந்தது ... தினம் ஒரு குறள் வாக்கு,
"பிறவிப் பெருந்துயர் நீந்துவர்,நீந்தாதார்
இறைவனடி சேரா தார்."