பதில் யார் கூறுவார் இதற்கு

கசாப்பு கடையில் கசப்புக்காரர்
மும்முறமாய் வெட்டிக்கொண்டிருந்தார்
ஒரு கிடவாய் , சிறு துண்டங்களாக்கி
பக்குவமாய் ஒரு பக்கெட்டில் நிரப்ப
அன்று கடைக்கு வந்த அவர் ,பெண், பாத்திமா
வயது சுமார் ஐந்திருக்கும்,தந்தையைக்
கேட்டாள், 'அப்பா, தினமும் நீங்க
இப்படி வெட்டி விற்கிறீர்களே கிடாக்களை
இது பெரும் கொலைப்பாதகமல்லவா?
உங்களை தட்டிக்கேட்பார் இல்லையா? என்றாள்,
அதிர்ந்துபோன கசாப்புக்காரர், சுதாரித்து
சொன்னார்' அம்மா இந்த தொழில் என் பாட்டன்
முப்பாட்டன், அவன் பாட்டன் என்று
வழி வழியா செய்துவரும் குலத்தொழில் அம்மா
இது எப்படி கொலையாகும்.... சொல்...
அப்பா நேத்து வீட்டெதிரே ரவுடி ஒருவரை
வெட்டி மாய்த்து போனானே... அது என்னப்பா
அது கொலையம்மா, கோர கொலை......என்றார் தந்தை;
அப்பா, அந்த கிடா கதற கதற வெட்டி
கொல்கிறீரே அது..... கொலை இல்லையா ?
இதற்கு உமக்கு தண்டனை....... யார் தருவார்?
கசாப்புக்காரருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
என்ன இவள் கலியுக ப்ரஹலாதனுடை சோதரியா
என்று மனதில் நினைத்து.... சொன்னார்
'பாத்திமா, இதற்கெல்லாம் எனக்கே பதில்
தெரியாது, இருபது வயது முதல் நான்
செய்துவரும் ஒரே தொழில் அம்மா இது
வேறோர் தொழிலும் அறியேனேம்மா நான்.

ஒன்று செய் நீ....... இங்கே இறைச்சி வாங்க
வருவார்களே அவங்களைக்கேள் , ஒரு வேளை
அவங்க இதற்கு ஏதாவது பதில் தரலாம் என்றார்.


அப்போது அங்கு இறைச்சி வாங்க வந்த
ஒருவரிடம் அதே கேள்வி கேட்டாள்
கசாப்புக்காரர் மகள் பாத்திமா.............

அவரும் அதிர்ச்சியில் , முதலில் பதில்
சொல்ல முடியாதவர், சுதாரிச்சிக்கொண்டு பின்னே
சொன்னார், 'இதை பாரம்மா, இதுக்கு
என் கிட்ட ஒரே பதில், அதுதான் , 'நான் என்
தாய், தந்தையர் மூலம் இறைச்சி சாப்பிட
கற்றேன்..... இப்போ எனக்கே பிள்ளைகள்..
இறைச்சி சாப்பிடவேணும் என்று அவர்கள்
கூறினால், இவரிடம் தான் வருவேன், வாங்குவேன்.
என் பாட்ட, முப்பாட்டன், அவர் பாட்டன்
எல்லாரும் இவங்க கடைலதான் பரம்பரையா
வாங்கிவந்தாங்க.... நானும் இப்போது என்றார்

பரம்பரையா என் தாத்தா, தாத்தாக்கு தாத்தனு
மிருக கொலை செய்து வராங்க ..... கேக்க
யாருமில்ல... பாவம் ஆடு என்ன செய்யும் ...

பாப்பா மேலும் சொன்னது , நேத்து
எங்க வீட்டு எதிர் வீட்டில் நாய் மீது
கோபம் கொண்ட எஜமானர், அதை
ஜன்னல் வழியாக தூக்கி எரிய, கீழே
விழுந்து பாவம் அது இறக்க, அவரை
போலீஸ் காவலர் கைது செய்து
'லாக்கப்பில் அடைத்தார்.................

கிடாவை தினமும் கொலை செய்யம்
உங்களுக்கு..... தினம் வருமானம்......!!!!!!!!!!!!!

என்னப்பா நியாயம் இது .............
யார் இதை தட்டி கேட்க .............
ஆட்டிற்கு வாயுண்டு, கதற
பேச தெரியாதே பாவம் அதற்கு என்றாள்........

பதில் ஏதும் வாயில் வராது
வாயடைத்துப்போன கசாப்புக்காரர்
கோபம் பொங்க........பெண்ணிடம் சொன்னார்
'பாதிக்குமா, நீ பேசியது போதும்
வீட்டுக்கு போய்விடு இப்போ' என்றார்.

எதிர்வீட்டு தாத்தா என்னிடம் குழந்தை
பாத்திமா, நடந்தது அத்தனையும் கூறி
தாத்தா உங்களிடம் இதற்கு நியாயம்
ஏதேனும் உண்டா...............என்றாள்

இல்லையே அம்மா என்றேன்
கடவுளைத்தான் கேட்கணும் என்றேன்.

.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Oct-18, 7:39 am)
பார்வை : 144

மேலே