தாயே என்னில் உன்னைக்கண்டேன் நான் இன்று
தூளியில் இட்டு தாலாட்டு பாடி
என்னை தூங்கவைத்தாய்
தரையில் நீந்த துவங்கினேன்
அதைப் பார்த்து ரசித்தாய்
சிரித்துமகிழ்ந்தாய் பேரானந்தம் கொண்டு
தத்தி தத்தி தவழ ஆரம்பித்தேன் தரையில்
தண்ணீரில் தவழும் தவளையைப்போல்
வாயில் கை வைத்து ஆச்சரியம் அடைந்தாய்
வளரும் என் பருவத்தை நினைத்து நினைத்து
உச்சி குளிர்ந்தாய் பெற்ற உன் வயிற் குளிர
சுவற்றைப் பிடித்து மெல்ல மெல்ல
நடக்க துவங்கினேன் ...விழுந்தேன்..எழுந்தேன்
விழுந்தேன்....அழுதேன்....அழாதேடா கண்ணா
எழுந்திரு என்று கைகொடுத்தாய் நிற்கவைத்தாய்
பலம்வந்தது நீ எனக்களித்த உற்சாகத்தில்
இப்படியே, இப்படியே என்னைப்பெற்றவளே
என் அன்பு அன்னையே என்னை ஆளாக்கினாய்
இன்று இதோ என்முன்னே என் இளவல்
தூளி இல்லை, தொட்டிலில் என் தாலாட்டில்
துயில்கின்றான் .... இல்லையம்மா,நீ
அன்று எனக்காக பாடிய தாலாட்டு பாடலை
இன்று நான் பாட ஆனந்தமாய் தூங்குகிறான் அவன்
தாயே , இதைக்கண்டு மகிழ இன்று நீ இல்லையே
என் அன்னையே அதை நினைத்து அழுகிறேன் நான்
ஆனால் என் அன்னையே இன்று என்னில்
உன்னைக்கண்டு கொண்டேன் என் கண்ணீரும் நின்றதம்மா
உன்னைப்போல் நானும் நல்லபிள்ளைக்கு
ஒரு நல்ல பிள்ளைக்கு எனைத்தந்து உன்னைப்போல்
வளர்க்கும் தாயம்மா நான் ............
என்னில் உன்னைக்கண்டு மகிழ்ந்தேன் நான்.
,