தழும்புகள் இல்லா காயம்

தாயின் கருவரையின் சிம்மாசனத்தில்
உருவெடுத்தவன் நீ!

விதையாய், புயலாய்
எழுந்து வா!

மானிடப் பிறவிக்கே
மகத்துவமாய் எழுந்திடு!

வரும் காலத்தை
சவாலாய் எதிர்கொள்!

அனைத்தும் இருந்தும்
சிலர் அலட்சியம் கொள்வர்!

வாழ நினைப்பவர்களுக்கு
வானம் தூரமில்லை!

இங்கு தோல்வியை
தொடாதவர் எவருமில்லை!

அடுத்தவரின் தாகம் தணிக்க
எவராலும் இயலாது!

கர்வம் பிடித்தவர்கள்
இம் மண்ணில் ஏராளம்!

சுமக்காமலே சுமை என்பர்!

விதிக்கே கட்டளையிட்டு
வீணாய் பலர் மாண்டதுண்டு!

நம்பிக்கை நட்சத்திரங்கள்
தூவானமாய் ஏராளம்!

விழி நீரை ஒளியால்
சுடர்விட்டு எரித்திடு!

மனிதனின் குணங்கள்
வேறாக இருப்பின்
குருதியின் நிறம் ஒன்றுதான்!

மானிடர்கள் இடையே
மல்யுத்தம் நடக்கும்!
கேட்டால்
மேடை நாடகம் என்பர்!

சுயநலம் நிறைந்த
சமுதாயத்தில்
என்றும் போராளியாய்
மட்டுமே வாழ்ந்திடு!

இங்கு விழித்துக்கோண்டே
சிலர் உறங்குவர்!

வழி நிறைந்த உலகில் வலிகளோடு
வாழ்ந்திடாதே!

தழும்புகள் இல்லாத காயங்கள்
ஏராளம்!

இழப்பபதற்கு ஒன்றுமில்லை
தன்னம்பிக்கை தவிர!

இரவிற்கு வழிகளே இல்லை!
விடியலைத் தவிர!

உன்மீது வீசி எறிந்த கற்களை
கொண்டு கோட்டையாக்கிடு!

துரோகங்களும், ஏமாற்றங்களும்
பரிசுப் பொருளாய் எடுத்துக் கொள்!

விமர்சனங்களை ஆணிவேராய்
வேர் ஊன்றி நட!

சாகங்கள் எல்லாம் சரித்திரம்
படைத்ததுண்டு!

கொஞ்சம் போராடித்தான்
தோற்றுப் பார்!

வாழ்வின் ரகசியத்தை நீ அறிவாய்!

எழுதியவர் : கவிதாயினி செ.மேகலாதேவி (2-Oct-18, 2:08 pm)
பார்வை : 177

மேலே