தன்னம்பிக்கை
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியுடன் போராடு ...
உன் எல்லை இதுவரை
என் அறியாது வரை போராடு....
உன்னில் ஒருவன்
உள்ளான்...
இலட்சிய கனவை நிறைவேற்ற
போராடு..
முயன்றவரை முயற்சி செய்...
வீழ்வாய் என
நினைக்காதே...
எழுவாய் என உறுதி செய்...
துவண்டு போகாமல்
துணிவுடன் செல்....
எந்நிலையிலும் கலங்காதே...
எவருக்கும் அஞ்சாதே..
வேகமாய் செல்..
விவேகமாய் செல்..
பேசுவர் பேசட்டும்.
தூற்றுவர் தூற்றட்டும் ....
பொறாமை நிறைந்த உலகை எதிர் கொள்..
பொறுமையுடன் பொறுப்புடன்...
நிலைநாட்டு உன் வெற்றி
கொடியை வேலிகள் தாண்டி....