பிழிகிறதே நெஞ்சைப் பிளந்து

அண்டை நிலத்தில் அடைமழை வெள்ளத்தால்
புண்பட்ட தேயுள்ளம்; பொங்கிடும் - கெண்டை
விழிகளில் சொட்டி விழுகின்ற செந்நீர்
பிழிகிறதே நெஞ்சைப் பிளந்து.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Oct-18, 9:30 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 96

மேலே