ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் - மாயா மாளவ கௌளை
முத்துத் தாண்டவரின் பாடல்
ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை
காணக் கண் ஆயிரம் வேண்டாமோ?
நாடித் துதிப்பவர் பாங்கில் உறைபவர்
நம்ப திருச் செம்பொன் அம்பலவாணர் (ஆடிக் கொண்டார்)
ஆர நவமணி மாலைகளாட,
ஆடும் அரவமும் படம் பிடித்தாட,
சீரணி கொன்றை மலர்த்தொடையாட,
சிதம்பரத் தேராட
................பேரணி வேதியர்
தில்லை மூவாயிரம் பேர்களும்
பூசித்து கொண்டாட காரணி
காளி எதிர்த்து நின்றாட,
கனக சபை தனிலே!!
ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை
காணக் கண் ஆயிரம் வேண்டாமோ!!