வெற்றியின் தேடல்

உலகில் தேடல் இல்லாத உயிரினமே இல்லை. தேடல் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் வேறுபாடு உடையதாக இருக்கும் ஆனால் அவை எல்லாம் உயிர் வாழ மற்றும் வெற்றிக்கு தேவையான தேடலாக இருக்கும். தேடலின் மூலம் கிடைக்கும் வெற்றிதான் அந்த உயிரினத்தின் வாழ்வை இந்த பூமியில் நிலைக்கச் செய்யும் .

தேடல் மூலம் கிடக்கும் வெற்றி என்பது ஒரு சில நேரங்க்களில் மட்டுமே முதல் முயற்சியிலே கிடைக்கும். .வாழ்வில் வெற்றி என்பது எளிதில் கிடைப்பதில்லை. .உலகில் யாருக்கும் எப்பொழுதும் எளிதில் கிடைக்கும் எதுவாயினும் அதன் மதிப்பை அவர்கள் உணர வாய்ப்பில்லை. . பல நாட்கள் பசியோடு இருப்பவனுக்கு மட்டுமே பழைய சோற்றின் அருமை தெரியும்

பால்மணம் மாறா பட்சிளம் குழந்தை தனது பத்து மாதத்தில் தானக எழுந்து நிற்க முயற்சி செய்யும்போது பலமுறை கீழே விழுந்தாலும் அந்த குழந்தை தன் முயற்சியினை கைவிடுவதில்லை. ஏனெனில் வெற்றி ஒன்றே அந்த குழந்தையின் குறிக்கோள் ...

வெற்றி என்பது எழுந்தவுடன் கிடைப்பதில்லை உலகில் எந்த உயிரினதிறக்கும் வாழ்க்கை என்பது போராட்டமே. இந்த போராட்டதில் வெற்றி பெற்ற உயிரினம் மட்டுமே உலகில் வாழ்வதற்கு தகுதி உடையதாக இருக்கும்.

மனிதனின் தேடல் இல்லையெனில் உலகில் மாற்றம் எதுவும் நடந்திருக்காது கடவுள் மனிதனை படைத்தான் என்ற கூற்று உண்மையாக இருக்கும் நேரத்தில் ஆதாமும் ஏவாளும் தேடியதின் விளைவே இந்த மனித வாழ்க்கை

வெற்றிக்கு கடின உழைப்புடன் கூடிய அறிவு மட்டுமே போதும். உயர்ந்த கல்வி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற கூற்று உண்மையாக இருந்தால் இன்று கல்வி கற்ற அனைவருமே வெற்றி பெற்றவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை என்ன ? இன்று உயர்ந்த கல்வி கற்றவர்கள் வேலை இல்லாமல் இன்றளவும் வேலை தேடி அலைவதை நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருகின்றோம்.

வெற்றி என்பது உங்களின் கல்வியை வைத்து கிடைப்பதில்லை, மற்றவர்களின் தேவையை நிறைவேற்ற இந்த உலகில் உங்களின் புதிய சிந்தனையுடன் கூடிய முயற்சி எளிமையான அணுகுமுறை உங்களில் எண்ணம் செயல் ஆகிவற்றின் மூலமே கிடைக்கும் முடியாது என்ற ஒற்றை வார்த்தை கொடுத்த வலியை என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களே உலகில் வெற்றி பெற்றவர்கள்.

நம்மை முன்னே நடக்கச் சொல்லி பின்னால் மகிழ்வதும் நம்மை முன்னேறச் சொல்லி பின்னால் நின்று மகிழ்வதும் நம்மை உருவாக்கிய அன்னை தந்தை மற்றும் ஆசிரியர் மட்டுமே.உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு ஒன்று மட்டுமே. அது விலை இல்லாமல் கிடைப்பதால் அதை யாரும் உணரவில்லை. வெற்றி என்பது எளிதில் கிடைப்பதில்லை ஆனால் அது மதிப்பு உடையதாய் இருக்கின்றது எனவேதான் அதை தேடி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் ஓடி ஓடி தேடி பெற்ற வெற்றியை கொண்டாட உங்களின் உறவுகள் வேண்டும் வெற்றி மட்டுமே உங்களின் வாழ்வை தீர்மானிப்பதில்லை அது போல உறவுகள் மட்டுமே உங்களின் வாழ்வை தீர்மானிப்பதில்லை.உறவுகளோடு இனைந்து நீங்கள் பெற்ற வெற்றியே உங்களின் வாழ்வை வளமாக்கும்.

எழுதியவர் : கருப்பசாமி (5-Oct-18, 11:40 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : Vettriyin thedal
பார்வை : 1121

மேலே