பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கடலும் காற்றும் சேர்ந்த
கடல் அலைக்கு இன்று பிறந்த நாள்
வானும் வண்ணமும் கலந்த
வானவில்லுக்கு இன்று பிறந்த நாள்
மலரும் தேனும் கலந்த
மங்கைக்கு இன்று பிறந்த நாள்
துளை பொறித்த மூங்கிலும் காற்றும் கலந்த
இசைக்கு இன்று பிறந்த நாள்
கணிப்பொறிக்குள் இணைந்த என்
இதயத்திற்கு இன்று பிறந்த நாள்


மண்ணில் பூக்கும் பூக்களெல்லாம் மரணம் கொள்வதே
உன் அன்பு ஓன்று இல்லாத ஏக்கத்தில் தானடி
இன்று மணிக்கொருமுறை மழைத்துளி
மண்ணில் வீழ்ந்து கிடப்பதே
உன் பாதத்தில் ஆசி வாங்காதடி

புன்னகை தருணங்கள் பூக்கட்டும் உன் வாழ்வில்
வெற்றி உன் கையில் குழந்தையாய் வளரட்டும்
தோல்வியை ஏற்று கொள்ள உன் உள்ளம் பழகட்டும்
முடிவில்லா இந்த உலகில் முடிந்த வரை
மகிழ்ச்சியாய் நீ வாழ இறைவனை வேண்டுகிறேன்......



என் இதய சினேகிதி ஜெனிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......

எழுதியவர் : (6-Oct-18, 7:47 am)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 7882

மேலே