அடங்க மறு
விதைகள் அடங்கினால்...
விருட்சம் இல்லை!!
மேகம் அடங்கினால்......
மழைத்துளி இல்லை!!!
ஆதவன் அடங்கினால்.....
ஒளி இல்லை!!!
பூக்கள் அடங்கினால்....
மணம் இல்லை!!!!!
காற்று அடங்கினால்....
தென்றல் இல்லை!!!!!!
மனிதா நீயும் அடங்கிவிடாதே....
சரித்திரத்தில் உனக்கு இடம் இல்லை!!!!