நெஞ்சு குளிர்ந்ததடி நித்திலா

பளிங்குப் பாவையே
உன்பார்வையில் காதலோ
பாவை மேனி ஒளியில்
தோற்பது வானத்து நிலவோ
கோவை இதழ் புன்னகைக்கு
கவி நான் சொன்னால் பொய்யோ ?
நெஞ்சு குளிர்ந்ததடி நித்திலா
நின் நேசத் தென்றலில் ...

நன்றி இலங்கை கவிச்சகோ அஷ்ரப் அலி

கவிச் சகோ செந்தமிழ்ப்பிரியன் பிரசாந்தின் விருப்பத்திற்கு இணங்க
நித்தில விளக்கம் :

நித்திலம் என்றால் முத்து என்று பொருள்
நித்திலத்திலிருந்து நித்திலா என்ற பெயரை உருவாக்கினேன் .
முத்திலிருந்து முத்தா என்ற பெயர் போல் !
முத்தானவள் அல்லது முத்துப் போன்ற புன்னகையாள் .

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-18, 5:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 176

மேலே