காதலில் தவிக்கும் இதயங்கள்

மனங்கள் ரெண்டு துடிக்குது....
பார்க்க கண்கள் தவிக்குது..

பித்தம் தானே பிடிக்குது...
பிஞ்சு மனசு தவிக்குது...

அன்பு அழைக்க துடிக்குது...
அகங்காரம் தானே தடுக்குது...

இமைகள் நான்கும் அடிக்குது..
இதயம் ரெண்டும் தவிக்குது...

சேர்ந்து வாழ நினைக்குது..
முதலில் யாரு பேச!! தடுக்குது...

தயக்கம் தானே தழைக்குது...
மௌனம் இங்கே நிலைத்தது...

மனசு மறக்க நினைக்குது....
நினைவு தானே தடுக்குது....

மாதம் தானே கழியுது...
மறந்து!! மனசு தான் ஜெயிக்குது....

எழுதியவர் : தீனா (7-Oct-18, 8:26 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 601

மேலே