மைனாரிட்டி

எழுசீர் விருத்தம்

அரசிய லில்தோற் றவனடங் கான்பார்
அருகியே கெடுப்பனாம் நம்மை

புரிந்திடா எதிர்ப்பன் பொதுவிலே மாந்தர்
உரிமைபற் றிகவலை கொள்ளான்

வெறும்பயல் சேட்டை வேடிக்கையும் செய்வன்
எருமைபோல் பொறுப்பனாம் ஏச்சை

அரும்புகள் மலரும் அரைநொடி யில்தான்
அறுத்திடுவான் கட்சியின் கூட்டை

அறிவிலா தறிஞர் பலரையும் ஏசி
நரியென ஊளைசெய்வன் பாரும்

தறிகெடப் பிறரை அழைத்திடு வன்கேள்
நரிபுறம் நடந்திடுவர் மாந்தர்

பிறமதம் ஏற்றி இசைத்திடு வர்கேள்
பிறமதத் தமிழராம் என்பர்

சிரைத்தனர் எமது சீர்மிகு பண்பாட்டை
குறைந்தனர் உண்மையில் தமிழர்

எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-18, 8:56 pm)
பார்வை : 526

சிறந்த கவிதைகள்

மேலே