வாழ்க்கையின் உண்மை புரிந்து கொள்ளவில்லை

என் ஆசிரியை வகுப்பில் கேட்டார்
நீ பெரியவளானதும் என்ன ஆவாய்
என ஒவ்வொருவரையும்;
அவரவர் ஆசையைச் சொன்னார்கள்.

மது சொன்னாள் டாக்டரென்று,
மேகா சொன்னாள் பைலட் என்று,
நான் சொன்னேன் மகிழ்வாய்
இருக்க வேண்டுமென்று;

நீ என் கேள்வியைப்
புரிந்து கொள்ளவில்லை செல்வி
ஆசிரியை சொன்னார்;
நீங்கள் வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளவில்லை அம்மா
என்றேன் நான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-18, 2:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

மேலே