களிப்பு
வான்பார்க்க முகில்பார்க்க இந்திர
வில்பார்க்க நீராட நீ பொய்கையில்
வீண்காணா முகில்காணா பேரழகி
உனைப்பார்த்து விழி மூடும் இவையாவையும்
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இதுபோல கொடி ஒன்றை
இதுவரையில் கண்டதில்லை
எனப்பாடி தான் களிக்கும் . . .