என் காதல் இரவுகள்
உன் கழுத்தை
இறுக்கியணைத்துக் கொண்டு
உறங்கப் பிடிக்குமெனக்கு
உன்னையும்
அறையையும்
தூக்கம் நிரப்பும் நேரங்களில்
இரவோடு பேசிக்கொண்டிருக்க
பிடிக்கிறதெனிக்கு
விழித்துக் கொண்டிருக்க பயந்து உறக்கம் மெல்ல வெளியேறுகிறது
உன்னை விழிக்க வைக்காமலேயே என் உறக்கம்
களவு கொண்டு.....