நினைவே
#நினைவே
பனியாய் சிலிர்க்கச் செய்தது
உன் நினைவுகள் இறந்த காலங்களில்..!
பனிப்போர் நடத்துகிறாய்
மௌன வெடிகுண்டுகளை வீசி..!
சிதறிக்கொண்டிருக்கிறேன்
சில்லு சில்லுகளாய் நிகழ் காலத்தில்…!
உறவினை
வேரோடு பிடுங்கியாகிவிட்டது
என்னை
தினம் அறுவடை செய்யும்
உன் நினைவுகளை
யார் வேரறுப்பது..?
செல்லரிப்பு நினைவுகளில்
உதிர்த்துக்கொண்டிருக்கிறேன்
உயிரை..!
#சொ.சாந்தி
சென்னை முத்தமிழ் சங்கம் நடத்திய போட்டிக்காக எழுதியது. தலைப்பினை அளித்த சங்கத்திற்கு மிக்க நன்றி..