கரையும் என் கர்வம்
காத்திருந்தேன் பெண்ணே
மெல்லிய தென்றலாய்
நீ வருவாயென.
காண்பதோ உன்
ஆனந்த தாண்டவம்
ஊழிக்காற்றின்
உற்சாக ஊர்வலம்
விஸ்வரூப தரிசனம்
வியாபித்து விழுங்கும்
விபரீத வித்தகம்.
கருணையற்ற உன்
களி நர்த்தனத்தில்
கரையும் என் கர்வம்.
காத்திருத்தல் தொடரும்
புதிய பூந்தென்றலாய்
நீ வரும்வரை.