சோகம்
எழுதுகோலே என் கதை கேளு கொஞ்சம்
ஊமையான என் வாழ்க்கையை
உன் (மை)யால் நிரப்பிவிடு
போதும் என்ற அளவுக்கு சொந்தமில்லை
நீ போய்விடு என்ற சொல் மட்டும் உண்டு
ஆண்டவனும் ரசிக்கிறான்
அதனாலே அனு அனுவாய் சோதிக்கிறான்
விதி என்னும் வாழ்க்கையில் பகடக்காயாய் உருள்கிறேன்
வீழ்ந்தது போதும் என்று எழுந்திட வீரியம் இருந்தும்
வீழ்கிறேன் .வீழ்ச்சியின் காரணம் சூழ்ச்சியா அல்ல சூழ்நிலையா என்று தெரிவதற்குள்
மலர்கிறது புது பிரச்சனை
அதுவே என் வாழ்வில் தினம் அர்ச்சனை
எழுதுகோலாலே தீர்த்துக்கொள்கிறேன்
எனது சோகங்களை வெள்ளை காகிதத்தில் நிரப்பிக்கொள்கிறேன்