நெக்குருகி உன்னைப் பணியாக் கல்நெஞ்சன் எனக்கருள்வாய் – ஆபோகி
பாபனாசம் சிவன் இயற்றிய ’நெக்குருகி உன்னைப் பணியாக் கல்நெஞ்சனெக் கருள்வாய்‘ என்று சிக்கல் சிங்கார வேலனை வணங்கிப் பாடும் அருமையான பாடலை D.K.ஜெயராமன் 'ஆபோகி' ராகத்தில் பாடுவதைக் கேட்கலாம்.
பல்லவி:
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சன் எனக்கருள்வாய் - முருகா (நெக்குருகி)
அனுபல்லவி:
திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸ¤ப்ரம் மண்யா (நெக்குருகி)
சரணம்:
முக் கண்ணன் உமை ஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே-வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து (நெக்குருகி)
யு ட்யூபில் DK Jayaraman-Nekkurugi-Abhogi-Adi-Papanasam Sivan என்று பதிந்து இப்பாடலைக் கேட்கலாம்.