அப்துல் கலாம்
ஏவுகணை நாயகன்
🌹🌹🌹🌹🌹🌹
- கேப்டன் யாசீன்
9500699024 .
🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்துல் கலாம்
இந்தியத் தாயின் முகம்.
இந்தியாவின் முகவரி.
நம் நாட்டின்
வடக்கே இமயமலை
தெற்கே அப்துல் கலாம்.
நடமாடிய விஞ்ஞானம்
தந்தை தெரஸா
இந்தியாவின் ரியல்
சூப்பர் ஸ்டார்.
கலாம்
காற்றைக் கிழித்த
காவிய நாயகன்.
இந்தியாவை
தலைநிமிரச் செய்த
இமயத் தமிழன்.
வாழ்வின் எல்லைவரை
சிறகு விரித்த
அக்னி பறவை.
மனித நேயம் மிக்க
மகத்துவ தேசத்தை
மண்ணில் சமைக்க
சுற்றிச் சுழன்ற
மனிதத் தேனி.
சாதிக்கலாம்
போதிக்கலாம்
இரண்டையும்
ஒருங்கே செய்த
உத்தமர் கலாம்.
காதல் கனவில்
மூழ்கித் திளைத்த
இளைஞர் உலகை
இலட்சியக் கனவில்
முத்தெடுக்க வைத்தவர்.
அவர்
உள்ளத்தில் முளைத்த
ஏவுகணை
விண்ணைத் துளைத்தது.
நெருப்பு நிலாவை இளைஞர்களின்
நெஞ்சங்களில் ஏற்றிய
நெம்புகோல்.
வல்லரசு விதை
மண்ணில் புதையுண்டது.
விரைவில்
அக்னிச் சிறகு முளைத்து
அகிலம் போற்றும்
வல்லரசு விருட்சம்
வளரும்.
அதற்கு இந்தியனாய்த்
தோள் கொடுப்போம்.
துணை நிற்போம்.
- கேப்டன் யாசீன்.
9500699024