உன்னுடையது எது

மண்ணிற்காக அடித்து கொள்ளும் மானிட பதர்களே!
வானத்தில் உன்னுடையது எது
வீசும் காற்றில் உன்னுடையது எது
சூரியனின் கதிர்களில் உன்னுடையது எது
நிலவின் ஒளியில் உன்னுடையது எது
மழையின் துளியில் உன்னுடையது எது
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
நீ வாழ வந்தாய் இந்த பூமியில்
வாழ்ந்து விட்டு போ!
மண்ணிற்காக அடித்து கொண்டு மாண்டு போவதேன்!
எல்லையில் எல்லை சண்டைகள் எதற்கு?
பங்காளிக்குள் பங்கு சண்டைகள் எதற்கு?
பொரம்போக்கு நிலத்திற்கு பட்டாக்கள் எதற்கு உன் பெயரில்?
உரிமையே இல்லாததற்கு உரிமை போராட்டங்கள் எதற்கு?
உரிமையே இல்லாத ஒன்றுக்கு எத்தனை வம்புகள் வழக்குகள்!
நீ பிறக்கும் போது சுமந்து வந்த உடலை கூட
இறக்கும் போது விட்டுதான் செல்ல வேண்டும்!
இங்கு ஏதுவும் உன்னுடையது அல்ல!!

எழுதியவர் : kayal (16-Oct-18, 1:53 pm)
Tanglish : unnudaiyadhu ethu
பார்வை : 236

மேலே