காதல்

கற்பனையில் நான் பொற்சிலையாய்
செதுக்கிவைத்த என் காரிகைக்கு
கவிதைச்சோலையில் அவள் அழகிற்கோர்
அழகு செய்யும் கவிதையைத் தேடி அலைந்தேன்
மனதிற்குவந்த அப்படியோர் கவிதை கிடைக்காமல்
ஏமாற்றத்தில் நான் திரும்புகையில் என்னென்பேன்,

என் எதிரே உயிர்க்கொண்ட , கற்பனையில் நான்
சமைத்த சிலையவளைக் கண்டுகொண்டேன்
அந்த வட்ட வட்ட வெண்ணிலவை என் நிலவை ;
ஒரே ஒரு பார்வைதான் என் மீது விடுத்தாள்
அந்த வானவில் புருவத்தாள், பார்வையாலே
அள்ளிக்கொண்டாள் அப்படியே என்னை
தன மனதில் சிறையிலிட்டாள் என்னை
தன்னவனாக்கிக்கொண்டாள் நான் மீண்டும்
ஒருமுறை அவளை பார்க்கும் முன்னே '

கவிதைத் தோட்டத்தில் இவளுக்கு நான்
இவள் அழகிக்கோர் கவிதை தேடி நின்றேன்
மனதிற்குவந்த கவிதை கிடைக்கவில்லை ,,,,,
என்று நினைத்து திரும்பினேன்......
கற்பனையை மெய்யாக்கி என்முன் நிற்கின்றாயே
ஒரு பார்வையால் என்னைக்கவர்ந்து உன்மனதில்
சிறைவைத்த உன்னை நான் , நான் தேடிவந்த
'கவிதா' என்று உன்னை நான் அழைக்கவா ...............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Oct-18, 8:51 am)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே