பயந்தாங்குள்ளிப் பெண்
அவள் பாசத்தோடு
என்னுடன் பேசுவாள்: தன்
பேரார்வம், திறமை பற்றி;
வீணை முதல் கொண்டு
நட்சத்திரம் வரை; பின்
இடைநடுவில் மெளனித்து,
மன்னித்தருள்க வென்பாள்;
பேசியதற்கு!
எல்லாம் ஏன்...?
எப்போதோ, எங்கேயோ,
அவள் வாழ்வில் நேசித்த
யாரோ ஒருவர் அவ்
அழகிய வார்த்தைகளை
அலட்சியம் செய்தும்;
“மூடு வாயை; உவற்றை
உன்னுடனே வைத்துக் கொள்;
உதைக் கேட்க
யாருமிங்கு அழவில்லை”
என்று சொல்லியும்
அவள் இதயத்தைச்
சுக்கு நூறாய்ச்
சிதைத்திட்டார் போலும்...
அழுது கொண்டே வந்தாலும்
அவனியில் மக்கள் யாரும்
அவதரிப்பதில்லை சோகத்துடன்...
அவர்கள் அவ்விதம்
ஆக்கப்படுகிறார்கள்!
ஆங்கில மூலக்கவிதை: நிக்கிற்றா ஜில்
தமிழில் மொழியாக்கம்: தமிழ்க்கிழவி