துணையாகிவிடு
காதலனே என்னைக் கரம் பற்றிடு /
காலமெல்லாம் இணைந்து வாழ்ந்திடு /
கனவுலகை மறந்திடு /
நிஜ வாழ்க்கையில் நுழைந்திடு /
கழுத்தில் மாலையிடு /
மஞ்சள் தாலி கட்டிடு /
முந்தானை இழுத்திடு /
முதல் இரவு
இவை என்று உரைத்திடு /
கன்னம் தொட்டு.
இதழ் முத்தம் பதித்திடு /
கார்க் கூந்தல் கோதிடு /
மெல்லத் தழுவிடு /
மெதுவாக அணைத்திடு /
சிறுத்த இடை தொட்டிடு /
சிவந்த மேனியைப் பார்த்திடு /
வித்தைகள் காட்டிடு /
வியர்வையைப் பெருக்கிடு /
மோகத்தை அழைத்திடு /
பாவையாய் மாத்திடு /
பருவக் கதை கூறிடு /
முகப் பருக்களை அழித்திடு /
நெருக்கத்தைக் கொடுத்திடு /
இளமைக் கோலம் கண்டிடு /
இணைந்த சுகம் சொல்லிடு /
எச்சங்கள் துடைத்திடு /
வெட்கத்தை உடைத்திடு /
நாணமதைத் துரத்திடு /
மிச்சம் மீதி.
நாளையென உரைத்திடு /
என்றென்றும்
அன்பைக் கொடுத்திடு /
இறக்கும் வரை
துணையாய் இருந்திடு /