ஒரு கொழந்தை பேரு ஹன்சிகா - இன்னோரு கொழந்தை பேரு -----

ஏண்டா பொன்னையா, உன் மனைவி மருதாணிக்கு மகாலட்சுமிங்க ரண்டு பேரு பொறந்து ஒரு வாரம் ஆகுது. இன்னும் பேரு வைக்காம இருக்கிறோம்.

ஒரு பொண்ணுக்கு 'ஹன்சிகா'-ன்னு பேர முடிவு பண்ணீட்டோம்.

என்னது கண்ணுசிகாவா? என்னடா பேரு இது? 'கண்ணு' சரி. அந்த 'சிகா' ன்னா என்னடா.

நான் என்னத்த பாட்டிம்மா கண்டேன். ஹன்சிகாங்கறது ஒரு நடிகை பேரு.

அப்படியே. அநேகமா அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியாம இருப்பயே.

ஆமாம் பாட்டிம்மா. இன்னொரு கொழந்தைக்கு நீங்களே பேரு வையுங்க.

சரிடா பொன்னையா. ஒரு பொண்ணு 'கண்ணுசிகா'ன்னா இன்னொரு பொண்ணுப் பேரு 'மண்ணுசிகா' -வா இருந்தா நல்லா இருக்கும்டா.

மன்சிகா. ஆகா. ரொம்ப அருமையான பேரு பாட்டிம்மா. அந்தப் பேரையே வச்சிடறோம். அடியே மருதாணி இன்னொரு கொழந்தைக்குப் பாட்டி 'மன்சிகா' ங்கற அருமையான பேர வச்சுட்டாங்கடி. உலகத்திலே யாரும்
தன் கொழந்தைக்கு வைக்காத பேரு.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Hansika=Swan

எழுதியவர் : மலர் (19-Oct-18, 9:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 63

மேலே