ஆண்கள் மட்டும்
வணக்கம் அய்யா.
வணக்கம். வாய்யா உதவி இயக்குநர் இனியவன். இனிமேல் நாம தயாரிக்கிற எந்தப் படத்திலயும் பெண்களை எந்தப் பணிக்கும் சேர்க்கக்கூடாது. தளத்தை பெருக்கி சுத்தம் செய்யற ஆயாமார்கள் நாலுபேருக்கும் நஷ்ட ஈடா ஆளுக்கு இருபதாயிரம் குடுத்து நாளைலலிருந்து வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடுய்யா. அவுங்களுக்குப் பதிலா நாலு பசங்கள வேலைக்கு வையு. கதாநாயகி வேடமெல்லாம் இனி அழகான இளம் ஆண்களுக்குத்தான். பெண் வேடங்கள் அனைத்தும் பொருத்தமான ஆண்களுக்குத்தான்.
என்னய்யா திடீர்னு இந்த முடிவை எடுத்துட்டீங்க?
நமக்கு எதுக்கய்யா வம்பு. எந்தப் புத்துள என்ன பாம்பு இருக்கும்னு யாருக்கும் தெரியாது. இப்ப செய்தில அடிபடற மீ*டூ விசயத்தை எல்லாம் பாத்ததுக்கப்பறம் பெண்களுக்கு திரையில வாய்ப்புத்தர எனக்கு விருப்பமில்ல. சரி. ஒரு வாரத்துக்குள்ள நம்ம ஆண் நடிகர்களத் தேர்ந்தெடுத்தாகணும். வர்ற ஒண்ணாம் தேதி பூசை போட்டு படத்தை ஆரம்பிச்சிடலாம்.
அய்யா படத்தோட பேரு?
'ஆண்கள் மட்டும்'.