சொல்லிவிடு உன் காதலை

முடியில் ஒட்டிய
பிசின்கள் போலே
அகற்ற முடியாமல்
அவ்வாறே
இணைந்து கிடக்கும்
உன் ஞாபகங்கள்,
இன்னும் இனியும்
நான் கல்லில்
நாருரிப்பதா?
உன் சொல்லில்
ஊசலாடுகின்றதடி
என்னுயிர்
உன்னில்
மின்னும்
என் காதலை
ஒளிக்காமல்
இப்போதே
சொல்லிவிடேன் .

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (21-Oct-18, 5:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 385

மேலே