மெல்லியலாளே
 
 
            	    
                மெல்லியலாளே..
நீ இறகுகளைப் போல் மென்மையானவள்
உன் சிற்றிடை தழுவும் பட்டுத் துகிலும்
கட்டுக்கடங்கா கார்மேக கூந்தலும்
படைத்த பிரம்மனையும் பிரமிக்க வைக்கும்
சொற்களில் வர்ணிக்க முடியா சுந்தரி நீ
உன் பாதம் பட்டால் கல்லும் மலராகும்
தேகம் தொட்டால் தண்ணீரும் மருந்தாகும்
கண் இமைத்தாலோ இமையும் கவி பாடும்
அய்யகோ தேவலோக ரம்பையும் ஊர்வசியும்
உன் அழகுக்கு முன்னால் எம்மாத்திரம்?
 
                     
	    
                
