நெஞ்சக் காவிரி

வெண்முத்துக்கள் நிலம் வந்து
சிதறிச் சொரியும் உன் புன்சிரிப்பில்
இதழ் ரோஜாப் பூவும் வந்து விரியும்
துவண்டு விடும் கற்பனையும்
உன் முகம் கண்டால் துள்ளி வந்து
கவி பாடும் என் பேனாவும் உடன் ஜதி பாடும்
வளைந்து வழிந்தொழுகும் உன் ஆற்றொளுக்கு
உடலழகில் ஆர்ப்பட்ட என் நெஞ்சக் காவிரி
புதிதாய்ப் பாய்ந்து வரும் நீர் கண்டு
ஆர்ப்பரித்து மகிழ்வது போல் மகிழும்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (22-Oct-18, 2:55 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : nenjak kaaviri
பார்வை : 93

மேலே