அன்பில்லாத ஏழைகள்

நினைவுகள் நிறைந்த நிழலோ ? நான்
நிஜம் தேடி அலைகிறேன்---தனியே
துளிர்விடும் எண்ணங்கள் தொடரவே
தூக்கம் தொலைக்கிறேன்
கடல் வானம் காற்றைப்போல
மனதில் வானிலை மாற்றமோ ?
வறுமையும் சூழ்ந்துகொள்ள
வசதியை தேடி செல்கிறேன்
அண்டம் கடந்த நாங்களோ இங்கே
அன்பில்லாத ஏழைகள்
அடிமைகள் வாழும் நாட்டிலே
அகதிகள் நாங்கள்
நேசம் கொண்ட உயிர்களோ
நெஞ்சில் நிறைந்திருக்க
வேஷமிட்டு நானும் இங்கே
வருந்திக் கொள்கிறேன்
வலிகள் கொண்டு சிலபேர் இங்கே
விதியே என்றும் சிலபேர் இங்கே
வருங்காலம் வாழ்க்கை மாறும் --என
வாழ்ந்திட பழகினேன்
தேகம் இளைத்து பொருளீட்டியும் - என்
தேடல் தீரா போவதேனோ ?
தன்னிறைவொன்று மனதில் சூழ - என்
தனிமைகள் ஓயாதோ ?